திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் புதிதாக 42,104 பேர் சேர்ப்பு. 14,922 பேர் நீக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 January 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் புதிதாக 42,104 பேர் சேர்ப்பு. 14,922 பேர் நீக்கம்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 42,104 வாக்காளர்களை புதிதாக சேர்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்களே அதிகம் என்று தெரிய வந்துள்ளது.                    

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதியை அடிப்படையாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி 22ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் கலெக்டர் செ.ஆ.ரிஷப் வாக்காளர் பட்டியலை வெளியிட ஆரணி வருவாய் கோட்டாடட்சியர் தனலட்சுமி, செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்  (தேர்தல்) குமரன், வெற்றிவேல் (பொது) தேர்தல் தாசில்தார் சாப்ஜான், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துக்     கொண்டனர், இந்த வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 740 ஆண்கள், 10 லட்சத்து 61 ஆயிரத்து 934 பெண்களும் 126 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக 20 லட்சத்து 80 ஆயிரத்து 800 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 194 பேர் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. 


மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 14 ஆயிரத்து 922 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கரீக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் http://www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் Voter Helpline என்ற மொபைல் செயலி வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்து கொள்ளலாம். ஏதேனும் திருத்தம் அல்லது பெயர் விடுப்பட்டு இருந்தால் உரிய படிவங்கள் மூலமாக விண்ணப்பித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். வருகின்ற 25ந்தேதி 14வது "தேசிய வாக்காளர் தினம்" மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.                               


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாம்லை.

No comments:

Post a Comment

Post Top Ad