திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னையிலிருந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கானொளி காட்சி வாயிலாக இன்று (31-12-23) தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,மாநில தடகள சங்கத் துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இயக்குநர் சுதர்ஷன்,இணை ஆணையர் /செயல் அலுவலர் திருமதி ஜோதி,அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் மற்றும் பக்தர்கள் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை
No comments:
Post a Comment