திருவண்ணாமலை மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, திருவண்ணாமலை, ஆரணி மற்றும் செய்யார் உட்கோட்டங்கள் உள்ளடங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவை முன்னிட்டு 10000 பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு இலவச வீட்டுமனை பட்டா 30-12-23 அன்று வழங்கினார்.
இவ்விழாவில் சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி,பெ.சு.தி.சரவணன்,ஓ.ஜோதி,மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலாமணி, நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment