திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், தென் மாதிமங்கலத்தில் உள்ள ஏழுமலையான் திருமண மண்டபத்தில் மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று 14-12-23 ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மண்டல இணை ஆணையர் இந்து அறநிலையத்துறை சுதர்ஷன் ,ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.வி.சேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment