விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின் 1423ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் விருது வழங்கி பாராட்டு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 December 2023

விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின் 1423ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் விருது வழங்கி பாராட்டு.


திருவண்ணாமலை மாவட்டம் காந்தப்பளையத்தில் நடைபெற்ற விஸ்வகர்ம குருபூஜை விழாவில் குரு வழிபாடும் குல தெய்வ வழிபாடும் இல்லங்களில் அமைதியினையும் முன்னேற்றத்தினையும் ஏற்படுத்தும் எனவே அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது குருவையும் குல தெய்வத்தினை வழிபட வேண்டுமென அகில பாரத விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் கூறினார்.

தமிழகத்தில் 1400 ஆண்டுகளுக்கமுன் தோன்றிய மிக பழமையான அகில பாரத விஸ்வகர்ம மடாலயம், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், காந்தப்பாளையத்தில் அமைந்துள்ள அகிலபாரத விஸ்வகர்ம ஜெகத்குரு மாகாசன்னிதானம் ஶ்ரீநந்தல் மடாலயத்தின் 65 பீடாதிபதி ஶ்ரீஶ்ரீஶ்ரீ.சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமையில் 1423ஆம் ஆண்டு குரு பூஜை விழா 11.12.2023 திங்கட்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. 


பர்வத திருமூலாரண்ய திவ்யசேத்ர கண்ணுவ மகரிஷி ஆஸ்ரம மிருகண்ட நதி மனு, மய, துஸ்ட, சில்பி, விஸ்வக்ஞா விஸ்வகர்ம மகத்துவ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சார்ய மூர்த்திகட்கு 1423 ஆண்டு குருபூஜை விழா அபிஷேக ஆராதானையுடன் துவங்கியது. 

குருபூஜா விழக்குழு தலைவர் கோ.விசுவநாதன் முன்னிலையில் சமூக ஐவர்ண அனுமன் கொடியினை கண்ணமங்கலம் எ.கே.எஸ்.சரவணன் ஏற்றினார். வேதபாடசாலை முதல்வர் சிவ.சிவஞானசேகரன், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேவ.ஆசைத்தம்பி, லயசித்ரசசி தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் நிகழ்சிகளை ஒருங்கிணைத்து பேசினர்.


பென்னாகரம் எ.இராஜேந்திரன்  முன்னிலையில் ஆதீனத்தின் சார்பில் கே.பி.வித்யாதரன் சார்பில் 2024ஆம் ஆண்டிக்கான நாட்காட்டியினை வெளியிட கரூர் எஸ்.கே.டி.கருப்பசாமி, ஜி.விசுவநாதன், விக்னேஷ் சுவாமிநாதன் வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி, நிறுவனர் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 


ஶ்ரீசுவாமிகள் 65வது மடாதிபதி அவர்களால் எழுதிய திருப்புகழ் பஜன்ஸ் ஆதீன வேத வித்யார்கள் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினர். வேதத்தில் விஸ்வகர்மா என்ற தலைப்பில்  வி.தண்டபாணி சர்மா, சிற்பத்தில் விஸ்வகர்மா என்ற தலைப்பில் வழக்கறிஞர் தமிழ்செல்வன், புராணத்தில் விஸ்வகர்மா என்ற தலைப்பில் தட்சிணபாரத பௌரோகித சங்கத்தின் செயலாளர் ஜோதி முருகாச்சாரி ஆகியோர் உரையாற்றினார்கள். 


அகில உலக ஜோதிடர் சங்க தலைவர் ஓம்உலகநாதன், விராட் விஸ்வகர்மா சேவாலயாவின் நிறுவனர் தலைவர் கே.பி.வித்யாதரன் ஆச்சாரி திருப்பூர் ஜோதிடர் கணியர் இராஜசேகரன் ஆகியோர் விடை இங்கே வினா எங்கே என்ற தலைப்பில் பக்தர்களின் கேள்விகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் விடை அளித்தனர்.


ஆதீன விருது வழங்கும் விழா 65வது மடாதிபதி சிவராஜ ஞானாச்சாரிய குருஸ்வாமிகள் தெய்வீக தலைமையில் நடைபெற்றது. ஜோதிடத்துறையில் சன்டிவி புகழ் விராட் விஸ்வகர் சேவைலாய நிறுவனத்தலைவர்  முனைவர் கே.பி.வித்யாதரன் ஆச்சாரி  பொற்பணி துறையில் ஐந்தொழிலாளர் சங்க பொருளாளர் என்.குமார் ஆச்சாரி, ஆன்மீகத்துறையில் குளோபல் விஸ்வர்மா தலைவர் பி.ஶ்ரீதர் ராமச்சந்திரன் யோகா துறையில் மனோ யோகா மைய நிறுவனர் ஶ்ரீமனோகர் யோகாச்சாரியாயர் சிற்ப துறை டி.முத்துக்குமார், மாவட்ட ஸ்தபதி, எ.குமரவடிவேல், டி.செந்தில்குமார், சீனிவாசன், நா.ரமேஷ், பஞ்சலோக சிற்ப துறை கும்பகோணம் ஆர்.பிரபாகரன் ஆச்சாரி, மருத்துவத்துறை திருப்பூர் டாக்டர் ரமேஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


ஆதீன குருமகா சிவராஜ சுவாமிகள் பேசும் போது… அனைவரும் இறைவழிபாட்டுடன் நல்ல எண்ணம், சிந்தனையுடன் செயலாற்றிட வேண்டும்.  நம் குடும்ப நிகழ்வுகளில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப விட்டுக் கொடுப்போம் நலமாக வாழ்வோம்.  இந்த குருபூஜை விழாவில் பங்கேற்று குருவின் அருளை பெறுவது சிறப்பு மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் குரு பார்க்க கோடி பாபம் நிவர்தியாகும் என்பார்கள் இல்லங்களில் அமைதியினையும் முன்னேற்றத்தினையும் ஏற்படுத்தும் எனவே அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது குருவையும் குல தெய்வத்தினை வழிபட வேண்டுமென கூறினார். 


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad