திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் 26-12-23 அன்று நடைபெற்ற சிறு தானிய உணவு திருவிழாவில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா-2023ன் போது கிரிவலப் பாதையில் அதிகளவு அன்னதான கூடம் அமைத்ததற்கும், அதிகளவில் சிறுதானிய பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்கியதற்கும் மற்றும் சிறு தானியங்களை கொண்டு 15 அடி உயரத்தில் இந்திய வரைபடம் அமைத்து உலக சாதனை படைத்தததையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அவர்களை பாராட்டி பாராட்டு சான்று மற்றும் பதக்கத்தினை மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,மாநில தடகள சங்க துணை தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை
No comments:
Post a Comment