தீபாவளியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையாளர் பண்டக சாலையின் சார்பாக திருவண்ணாமலையில் பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பட்டாசு அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் குத்துவிளக்கு ஏற்றியும் கற்பூரம் ஏற்றியும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
பட்டாசு விற்பனை செய்யும் இடத்திற்கு 100 அடி தூரத்திற்கு மேல் எளிதில் பார்க்கக்கூடிய எந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு நடைமுறையில் இருந்தாலும் பட்டாசு குடோனுக்குள்ளேயே கற்பூரத்தையும் குத்துவிளக்கையும் அதிகாரிகள் ஏற்றி அலட்சியமுடன் நடந்து கொண்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment