இந்த நிலையில் விடுபட்டவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது மறு ஆய்வு செய்யப்பட்டு இந்த திட்டத்தினை விரிவுப்படுத்தி நேற்று 2ம் கட்டமாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் காணொலி காட்சியை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜ்பிரியா திருமண மஹாலில் நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 295 மகளிர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 2வது கட்டமாக மாதந்தோறும் ரூ.1000/- வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :- தி.மு.க.வின் கொள்கையே பெண்களுக்கு வாக்குரிமை பெற்று தந்தது தான். அதன் பயனாக தான் இன்று திராவிட மாடல் ஆட்சியால் அனைத்து உள்ளாட்சி அமைப்பிலும் அரசு உயர் பதவிகளிலும் மகளிர் பணி புரிகின்றனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு உதவித்தொகை என்று கொடுத்தால் நன்றாக இருக்காது. நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் தாயாகவும்,சகோதரியாகவும்,மகளாகவும் கருதும் அவர் தங்களின் உரிமையை முதல் அமைச்சரிடம் கேட்டு பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை உரிமை திட்டம் என அறிவித்தார். தற்போது 2ம் கட்டமாக வழங்குகிறோம்.
மேலும் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் அதன் மீது மறு ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் பேசினார், விழாவில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன்,எம்.எல்.ஏ.க்கள் ஒ.ஜோதி, மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்கார், பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், தாசில்தார் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், தி.மு.க. நிர்வாகிகளும், மகளிர்களும், பொது மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் உதவி கலெக்ட.ர் தனலட்சுமி நன்றி கூறினார்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment