அதன் பின்னர் 4 குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திரு கார்த்திகை தீபம் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.திருவண்ணாமலை நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment