இந்த நிலையில் நேற்று (19-11-23) கிரிவலப் பாதையில் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, தமிழக முதல்வர் சென்ற முறை கார்த்திகை தீபத் திருவிழா ஆன்மிக மக்கள் பாராட்டும் வகையில் அமைந்திருந்ததாக பெருமையாக கூறினார். எனவே இந்த ஆண்டும் சிறப்பாக இவ்விழா அமைந்து விட வேண்டும் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிரிவலப் பாதையில் 99 சதவீதம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மீதமுள்ள 1 சதவீதத்தை இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் நிறைவு செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை,M.P., மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment