திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல்-2024 முன்னிட்டு திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகம் மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரடியாக இரு இடங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப. இன்று 28-11-23 ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இ.கா.ப. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியர் நேர்மூக உதவியாளர் (தேர்தல்) குமரன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment