திருவண்ணாமலையில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன புதிய பஸ் நிலையம், அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

திருவண்ணாமலையில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன புதிய பஸ் நிலையம், அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு.


திருவண்ணாமலை வேலூர் சாலையில் மத்திய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது, இந்த பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, மதுரை, திருக்கோவிலூர், பெங்களுரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.               


திருவண்ணாமலைக்கு நாள்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நகரின் விரிவாக்கம் காரணமாகவும் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.                      

பொது மக்கள் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை திண்டிவனம் சாலை ரெயில் நிலையம் அருகே புதிய பஸ் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது, தற்போது 30 கோடியில் புதிதாக நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.            


அப்போது பஸ் நிலையத்தில் பஸ் உள்ளே வரும் வழிகள்,வெளியே செல்லும் வழிகள் மற்றும் சேவை சாலை அகலப்படுத்துவது தொடர்பாகவும் பஸ் நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் பஸ்கள் மாற்று வழியில் சென்று திரும்ப பஸ் நிலையத்திற்கு வருமாறு உள்ளதை சிறு பாலம் கட்டி நேரடியாக பஸ் நிலையத்திற்குள் பஸ் வர செய்ய தேவையான பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.                          


அப்போது நெடுஞ்சாலை துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர்,கண்காணிப்பு பொறியாளர் பழனிராஜ்,மாநில தடகள சங்கத் துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.  

No comments:

Post a Comment

Post Top Ad