முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையை விளக்கும் வகையில் பேனா வடிவிலான முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. 30-11-23 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த "முத்தமிழ் தேர்" அலங்கார ஊர்தியினை திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி அருகில் சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி மலர் தூவி வரவேற்று அலங்கார ஊர்தி உள்ளே அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் எழுதுகோலினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், முன்னாள் MP வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை
No comments:
Post a Comment