திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்முடியனூர் ஊராட்சி, அம்மாபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் சார்பில் புதிதாக 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கை மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி கல்வெட்டினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், துணை பொது மேலாளர் மணி, புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன், செயலர் கட்டுமானம் ஸ்ரீதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment