திருவண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் 17-11-23 அன்று நடைபெற்ற 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 5716 பயனாளிகளுக்கு ரூ.36 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை, (ம) நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநில தடகள சங்கத் துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் நடராஜன், இணை பதிவாளர் ஜெயம், துணை பதிவாளர்கள் ராஜசேகரன், கமலக்கண்ணன், சித்ரா, ஒன்றிய குழு தலைவர் கலைமணி கலைவாணி, பொது மேலாளர் ஆனந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், கூட்டுறவு சார் பதிவாளர் சுரேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment