கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்தத் திருவிழாவையொட்டி, கோயிலின் பிரதான கோபுரங்களான ராஜகோபுரம், பே கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் ஆகியவற்றை தீயணைப்புத் துறையின் ராட்சத வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையின் வடக்கு மண்டல துணை இயக்குநா் சரவணகுமாா் தலைமையில் மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் ராஜேஷ் கண்ணன் (செங்கல்பட்டு), சரவணன் (திருவண்ணாமலை), உதவி தீயணைப்பு அலுவலா் செந்தில் ஆகியோா் மேற்பாா்வையில் பே கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இரு கோபுரங்களின் உச்சி முதல் தரை வரை ராட்சத தீயணைப்பு வாகனத்தை கொண்டு தண்ணீா் மூலம் தூய்மைப்படுத்தினா். தொடா்ந்து, 2-ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை ( ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment