மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பதில் அளிக்கப்படும்; கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 November 2023

மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பதில் அளிக்கப்படும்; கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்.


உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01-11-2023 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தண்டராம்பட்டு ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் கலந்துக் கொண்டார்.

பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர் பேசியதாவது:- கிராமங்களில் குடிநீர் வசதி,கழிப்பிட வசதி அனைவருக்கும் வீடு ஆகிய இந்த 3 திட்டங்களும் தன்னிறைவு பெற வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். அதற்கான பயனாளிகள் தேர்வு செய்து பட்டியல்கள் கடந்த 2016-17ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 80 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்னர். 


எனவே பொது மக்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அதே போல் 2022-23 ஆண்டுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு மட்டும் தான் வீடு வழங்கப்படும். எனவே பட்டியல்கள் கணக்கிடும் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.      


இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி  செயலளார்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பட்டியல் தயாரிக்கும் பொழுது தங்கள் ஊராட்சிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதனை கணக்கிட்டு அதனை கிராம தன்னிறைவு திட்டத்தில் சேர்க்காமல் விட்டு விட்டு பின்னர் எங்கள் பஞ்சாயத்திற்கு பணம் வரவில்லை என்று குறை சொல்லக் கூடாது. மழை காலங்களில் ஏற்படுகிற சேதங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு போர்க்கால அடிப்படையில் அனைத்து கிராமங்களிலும் பணிகள் நடைபெறும் மற்றபடி கிராம வளர்ச்சி திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள பணிகளுக்கு மட்டும் தான் நிதி ஒதுக்கி பணிகள் நிறைவேற்றப்படும்.           


காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சரியாக உணவு வழங்கப்படுகிறதா தரமாக உள்ளதா என்பதையெல்லாம் தாய்மார்கள் பள்ளியில் சென்று ஆய்வு செய்யலாம். இந்த ஆண்டு மட்டும் ரூ.67 கோடி மதிப்பில் 492 பள்ளி கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 லட்சத்து 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதி உள்ளவர்களுக்கு ஏற்கனவே இந்த தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. 


மேலும் 32 ஆயிரம் பேர் புதிதாக மனு கொடுத்துள்ளனர்.வருகிற 25ந் தேதிக்குள் உங்களின் மனுக்கள் மீதான பதில்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். புதியதாக இந்த திட்டத்தின் விண்ணப்பிப்பதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்டவாறு கலெக்டர் பேசினார்.      


கூட்டத்தில் சே.கூடலூர் ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்றார்.ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன்,ஊராட்சி மன்ற தலைவர் கே.அலமேலு குமார் ஆகியோர் ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து பேசினர். கூடுதல் ஆட்சியர் ரிஷப்,ஊராட்சி திட்ட பணிகள் உதவி இயக்குநர் சரண்யாதேவி உள்பட பலரும் பேசினர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.           


கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பி.கோவிந்தன்,துணை செயலாளர் எல்.ஐ.சி. வேலு, தாசில்தார் அப்துர் ரவூப் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். 


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad