திருவண்ணாமலையில் பரபரப்பு. தி.மு.க.பிரமுகரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள். போலீசார் விசாரணை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 31 October 2023

திருவண்ணாமலையில் பரபரப்பு. தி.மு.க.பிரமுகரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள். போலீசார் விசாரணை.


திருவண்ணாமலை வடக்கு தெருவினை சேர்ந்தவர் முத்து (வயது 42).இவர் கட்டிட ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தீபம் நகர் வழியாக திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்து சென்ற மோட்டார் சைக்கிளை ஒரு கார்,2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.  
          

திருவண்ணாமலை வேங்கிகால் ஊராட்சி போளுர் சாலையில் உள்ள ஆவின் பால் குளிருட்டும் நிலையம் அருகில் வந்த போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென முத்துவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.பின்னர் மர்ம நபர்கள் முத்துவையும்,ராஜேஸையும் அரிவாளால் வெட்ட முயன்றனர். இதில் ராஜேஸ் தப்பி ஓடி பால் குளிருட்டும் மையத்திற்குள் சென்றார்.


பின்னர் மர்ம நபர்கள் முத்துவை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை,கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தப்பியோடிய ராஜேஸின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடினர். பொது மக்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.பின்னர் படுகாயம் அடைந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.                      


இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் தாலூகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாலை.

No comments:

Post a Comment

Post Top Ad