திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அய்யங்குளம் தூய்மை பணி அருணை சார்பாக நடைபெற்று வரும் புனரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தி அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 21-11-23 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை,M.P., மு.பெ.கிரி,M.L.A., மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, உதவி பொறியாளர் முகில், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பாளர் வாரியம் இரா.ஸ்ரீதரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை அருணை அமைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment