மேலும் ஐந்தரை அடி உயரத்தில் செப்பினால் ஆன மகாதீப கொப்பரை புதிய வண்ணம் தீட்டப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக 1200 மீட்டர் துணி திரி,உபயதாரர்கள் மூலம் அண்ணாமலையார்கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மகாதீபம் 11 நாட்கள் எரியும். இந்த ஆண்டில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
அதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில், மாட வீதிகள், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது 623 சிசிடிவி கேமராக்கள், 120 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறையினர் ஆகியோரும் அவசரக்கால மீட்புப்பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் 57 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், 27 இடங்களில் காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டன. இந்த தீபத்திருவிழாவிற்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கியது. தமிழக போக்குவரத்து துறையும் பக்தர்களின் போக்குவரத்து எளிமையாக்க பல ஆயிரம் பேருந்துகளை இயக்கியது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தீபத்திற்கான முன்னேற்பாடுகள் அவ்வப்போது எல்லா தரப்பு துறையிரையும் அழைத்து ஆலோசனை செய்துக்கொண்டு இருந்தனர்.
இம்மாவட்ட மந்திரியும்,பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், தூய்மை அருணை அமைப்பாளருமான எ.வ.வேலு அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி முதல் அமைச்சரின் உத்திரவு ஆகிய தீபத்திருவிழா சிறப்பாக அமைய அரும்பாடுப்பட்டனர். பக்தர்கள்,அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment