இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் 30-10-23 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் வட்டார செயலாளர் சையத் பாஷா தலைமையில் நடைபெற்றது. வந்தவாசி நகர்புறத்தில் வாழும் சிறுபான்மையினர் உட்பட பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டு மனை வழங்க கோரி இந்த போராட்டம் நடந்தது.
பல வருடங்களாக பலமுறை வருவாய் அதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் ஆட்சியர் அலுவலகத்திலேயே குடியேறும் போராட்டம் இன்று நடந்தது. கடைசியில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர். மாவட்டசெயலாளர் தங்கராஜ், பிரபல வழக்கறிஞரும் நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன், அன்பு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் படிப்படியாக நடைபெறும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை
No comments:
Post a Comment