திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 07-9-23 அன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு அவசர காலங்களில் பாதுகாப்பாக கையாள்வது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதையும் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பொருள்களை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர்,இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,மாவட்டகாவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப் ,இ.ஆ.ப.மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் இரா. ஜெகதீஷ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment