அவர் கவிதை, கட்டுரை, பேச்சு மூலம் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்து திருக்குறள் மற்றும் பொது அறிவு தகவல்கள் எழுதி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாவட்ட, மாநில அளவிலான. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று. சேவை செம்மல் விருது, சொற்குவை விருது, புதுமைப்பெண் விருது, பதக்கங்கள், விருதுகளை குவித்து வருகிறார்.
இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று உள்ளார். அவைகளில் வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கலைப் போட்டியில் பங்கேற்று சிறந்த பரதநாட்டிய கலைஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு 18 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அரசுப்பள்ளி மாணவியான திவ்யா ஸ்ரீ பரதநாட்டிய போட்டியில் பங்கேற்று திருவண்ணாமலை மாவட்ட அளவில் சிறந்த பரதநாட்டிய கலைஞராக தேர்வு செய்யப்பட்டதையொட்டி அவருக்கு "கலை இளமணி" என்ற பட்டம் பெற்றார்.
அதனை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அவர்கள் முன்னிலையில் திவ்யா ஸ்ரீ பட்டத்தை பெற்றுக் கொண்டார். அவர் 200 விருதுகள், 50 பதக்கங்கள், 500 பங்கேற்பு சான்றிதழ்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment