தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு திட்டமாக 5000 வேளாண்மை பெருமக்களுக்கு 50 சதவிகித மானியத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் வாயிலாக பவர் டில்லர், பவர் லீடர் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமமயமாக்கும் வழங்குதல் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் 329 பவர் டில்லர் - களையெடுக்கும் இயந்திரங்களை மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி 04-9-23 அன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ், கலசப்பாக்கம் MLA சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர் முத்துகிருஷ்ணன், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் திருமதி தமயந்தி ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment