புதிய சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு அலகு திட்டத்தினை திறந்து வைத்த சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 September 2023

புதிய சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு அலகு திட்டத்தினை திறந்து வைத்த சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 04-9-23 அன்று தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக வரி துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு அலகு திட்டத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாணந்தல் ஊராட்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், வேளாண்மை துறை இணை இயக்குநர் அரக்குமார், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முனைவர் முத்துகிருஷ்ணன், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் திருமதி தமயந்தி ஏழுமலை, ஆராஞ்சி ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad