இந்த நிலையில் 05-9-23 அன்று வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க இருந்த விவசாயிகள் அதிகாரிகள் கவனத்தை ஈர்ப்பதற்காக நூதன முறையில் பாடை ஒன்றை கட்டி தயார் செய்து பாடைக்கு மாலை அணிவித்த அவர்கள் சென்னாவரம் கூட்டு சாலையிருந்து பாடையை தூக்கி கொண்டு வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
பெண்களும் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர். பாடையை தூக்கி கொண்டு குறை தீர்வு கூட்டத்திற்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயானத்துக்கு பாதை வசதி செய்து தர கோரி கோஷமிட்டனர். அங்கு செய்யாறு குறை தீர்வு கூட்ட அலுவலர் கே.எஸ்.யுவராஜ், தாசில்தார் பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பாடையை அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.
- முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை மாவட்டம்
No comments:
Post a Comment