முகாமிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது: அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கிகள் சிறப்பான முறையிலும் துரிதமான முறையிலும் கடனுதவிகளை வழங்க முன் வர வேண்டும். தாட்கோ கடன், மகளிர் குழு கடன் பட்டு புழு வளர்ப்பு கடன், கைத்தறி கடன், வேளாண்மை விற்பனை துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் கிசான் அட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைத்திட வேண்டும்.
மேலும் அரசு மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்கு மேல் வங்கிகள் நிலுவையில் வைத்திருக்க கூடாது.களப்பணியாளர்கள் வங்கியாளரை தொடர்பு கொண்டு தங்கள் பணியினை உரிய முறையில் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8 இளைஞர்களுக்கு ரூ.51 லட்சத்து 23 ஆயிரம் மான்யத்துடன் கூடிய கடனுதவி, பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிளுக்கு ரூ.20 லட்சத்து 81 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவி,அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சத்து 82 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
மேலும் பிரதான் மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு திட்டத்தின் கீழ் 3 பய்னாளிகளுக்கு ரூ.98 லட்சத்து 58 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவி என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி,மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சையத் சுலைமான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
- முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment