திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், செங்கம் கணேசா் குரூப்ஸ், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நகர திமுக சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கணேசா் குரூப்ஸ் வழக்கறிஞா் கஜேந்திரன் தலைமை வகித்தாா்.


திமுக நகரச் செயலாளர் அன்பழகன் அவர்கள் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோா் கலந்து கொண்டு முகாமைத்தொடங்கி வைத்தனர். இநிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், ஒன்றியச்செயலளார்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், செங்கம் பேரூராட்சிமன்றதலைவா் சாதிக்பாஷா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் , என பலா் கலந்துகொண்டனா்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment