ஆனி மாத பௌர்ணமியான நேற்று இரவு 07.46 மணிக்கு தொடங்கி இன்று மாலை 05: 46 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் காலையிலேயே திருவண்ணாமலை வருகை தந்து 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமச்சிவாயா என்ற பக்தி முழக்கத்துடன் இரவு முழுக்க கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.


கிரிவலம் வரும் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதை முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் கிரிவலம் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment