

பின்னர் உற்சவ மூர்த்திகளான விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் காலை 6.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர்.
அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனிமாத பிரம்மோற்சவத்தையொட்டி 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment