திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பரமனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூ . 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள மேல்நிலை நீர் தேக்கதொட்டி கட்டும் பணிக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை தொடக்கி வைத்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் செந்தில் குமார், மனோகரன், ஏழுமலை நகர செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு


No comments:
Post a Comment