திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதிசார் கல்வி அறிவு பெறுதல் என்ற தலைப்பில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.அதில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடமும், அந்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மூன்று இடம் பிடித்தது.அந்த மாணவ, மாணவிகளுக்கு செங்கம் வட்டார வள மையத்தில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மைனுதீன் தலைமையில் இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரேம் நாத், வட்டார கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன், பள்ளி ஆய்வாளர் குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment