ஆடி மாத பௌர்ணமி கிரிவலம். திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 July 2023

ஆடி மாத பௌர்ணமி கிரிவலம். திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.


திருவண்ணாமலையில் வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரிவலம் நடைபெறவுள்ளதை  முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 01 மற்றும் ஆகஸ்ட் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 


அதன்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும். என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


- செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad