திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் இந்திரா நகர் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் அரசு பேருந்து சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் குடிநீர் விநியோகம் இல்லாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் அலுவலர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment