திருவண்ணாமலை நகராட்சி முருகையன் பெண்கள் பள்ளி, மெய்யூர் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம்,வாணாபுரம் ஊராட்சி, மழுவம்பட்டு கிராமத்தில், சதாகுப்பம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் 26-7-23 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர்மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment