சாத்தனூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 July 2023

சாத்தனூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனப்பகுதியில் சொர்பனந்தல் மேற்கு பீட் அரியகுஞ்சூர் கிராமத்திற்கு அருகில் உள்ள காப்பு காட்டில் பகுதியில் வனச்சரக அலுவலர் நா சீனுவாசன் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போது  தொலைவில் ஒரு வாகனம் நின்றது. 

அப்போது அந்த வாகனத்தை வனத்துறையினர்  ஆய்வு செய்த போது அதில் புள்ளி மான், காட்டு பன்றி, போன்ற வனவிலங்குகளின் இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad