திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த ஜமுனாமரத்தூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு கோடை விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அமைக்கப்பட்டு இருந்த பூக்கள், காய்கறிகள், பழங்கள், சிறு தானிய வகைகள் கண்காட்சியை பார்வையிட்டார்.
பல்வேறு அரசு துறைகள் சார்பாக கலை நிகழ்ச்சிகளும்,கபாடி போட்டி, கயிறு இழுத்தல்,கை பந்து போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment