தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று (13-7-23) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் திருவண்ணாமலையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ரூ. 34.65 கோடி மதிப்பிட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, எ.வ.வே.கம்பன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மோகனசுந்தரம், செயற் பொறியாளர் கௌதமன், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் இரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment