பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனை தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியில் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.


நிகழ்ச்சிக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தலைமை தாங்கி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். திராவிட இயக்க சொற்பொழிவாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி,வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் M.தினகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ், துணை அமைப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வெம்பாக்கம் செய்தியாளர் MS.பழனிமலை
No comments:
Post a Comment