வீரா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குளம் மந்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்தனர். இன்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து அனைவரும் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.


கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் மூழ்கிய வீராவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கிணற்றிலிருந்து சிறுவனை பிணமாக மீட்டனர்.
பின்னர் போலீசார் வீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது
-வெம்பாக்கம் செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment