திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் டவுன் நேரு நகர் ஆரணி சாலை பகுதியைச் சார்ந்த சண்முகம் (48) இவர் ஆரணி சாலை மாம்பாக்கத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார்.


இவர் நேற்று மாலை செய்யார் மாவட்ட அரசு மருத்துவமனை அருகில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் அப்போது பெரணமல்லூரிலிருந்து செய்யார் பஸ் ஸ்டாண்டுக்கு அரசு டவுன் பஸ் பேருந்து வரும்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் தகவல் அறிந்த செய்யார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் சடலத்தை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இறந்தவர் மனைவி சரண்யா செய்யார் போலீசில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
- செய்யாறு தாலுகா செய்தியாளர் ஸ்டீபன்.
No comments:
Post a Comment