திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழினை 24.06.2023 அன்று வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி) , பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஒ.ஜோதி (செய்யார்), மாநில தடகள சங்க துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் முனைவர். பாலமுருகன், திருவண்ணாமலை ஒன்றிய குழுத்தலைவர் கலைவாணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment