அதிமுக சார்பில் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 June 2023

அதிமுக சார்பில் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.


திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் சட்டமன்றத்தொகுதி, தண்டராம்பட்டு மேற்கு  ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளர், போளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அதிமுக நிர்வாகிகளிடம் அளித்தார். 


இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும்  மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மற்றும்  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:

Post a Comment

Post Top Ad