திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 21-6-23 அன்று அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதற்காகவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்காகவும்,லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், விவசாய பிரிவு செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகள், 3வது வார்டு செயலாளர் D.முனிராஜ், வட்ட பிரதிநிதி சுந்தர் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துக்கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்


No comments:
Post a Comment