திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பிரசித்தி பெற்ற ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் கோவில் கருடசேவை பிரமோற்சவம். இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக நடைபெறும்.
ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பான முறையில் மூலவர்களுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து தீப ஆராதனை செய்து கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- செய்தியாளர் கலையரசு.


No comments:
Post a Comment