மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சி நகர்புற நல்வாழ்வு மையங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 June 2023

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சி நகர்புற நல்வாழ்வு மையங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சி நகர்புற நல்வாழ்வு மையங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்  06.06.2023 அன்று சென்னை, தேனாம்பேட்டை, விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சி சென்ட்ரல், அண்ணாநகர் மற்றும் கீழ்நாத்தூர் என 3  நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், ஆரணி நகராட்சியில் ஆரணி நகர்ப்புற நலவாழ்வு மையம் என மொத்தம் 4 நகர நலவாழ்வு மையங்கள் தலா ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில்  மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்யம் மைதானம் அருகே உள்ள சென்ட்ரல் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை   தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர்  கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.  


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் பெ சு தி சரவணன் சுகாதார துணை இயக்குநர், மற்றும் துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad