மேலும், மின் கம்பங்களை மாற்றி, புதைவட மின்தடங்களாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. அதேபோல், பாதாள சாக்கடை பைப்லைன்கள், குடிநீர் பைப்லைன்களை சாலையோரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இந்த பணிகளை வரும் தீபத்திருவிழாவுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.


இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மாடவீதி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக, சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை திருவூடல் தெரு பேகோபுரம் தெரு சந்திப்பு முதல் வட ஒத்தவாடை தெரு வரை உள்ள சாலை நாளை முதல் பணி முடியும் வரை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தண்டராம்பட்டு மற்றும் மணலூர் பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டி தெரு, காந்தி நகர் பைபாஸ், வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லவும், பேகோபுரத்தெரு நகரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலைலிருந்து கல்நகர், ஆடுதொட்டி தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லவும் தேரடி தெருவிலிருந்து நகருக்கு உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே பூத நாராயண பெருமாள் கோயில்,சின்ன கடைத்தெரு வழியாக செல்லவும், செங்கம் சாலையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கம் சாலை சந்திப்பில் இருந்து கிரிவல பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரின் வளர்ச்சிகாக மேற்கொள்ளப்படும் மாடவீதி மேம்பாட்டு படிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது.எனவே பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment