திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திருவள்ளுவர் நகர் பகுதியில் ஜாதி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் ,துணை வட்டாட்சியர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ஞானவேல் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்வில் நரிக்குறவர், லாம்பாடி இன சமூக மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்கு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இம்முகாமில் திருவள்ளுவர் நகர், கட்டமடுவு மற்றும் நரடாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாதி சான்றிதழ் பெற மனுக்கள் அளித்த மனுதாரர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ்களை செங்கம் வட்டாட்சியர் ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment