குப்பை கிடங்கு அமைக்க மாற்று இடம் விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 6 June 2023

குப்பை கிடங்கு அமைக்க மாற்று இடம் விவசாயிகள் கோரிக்கை.


திருவண்ணாமலையை அடுத்த புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு பதிலாக மாற்று இடத்தை கண்டறிய வேண்டும் என்று வட்டாட்சியரிடம் விவசாயிகள் திங்கள் கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை-காஞ்சி சாலை புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    


இந்நிலையில் மே-30 ஆம் தேதி அன்று அமைச்சர் எ வ வேலு , மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோருடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது 10 நாட்களில் வருவாய் துறை குப்பை கிடங்கு அமைப்பதற்கான மாற்று இடத்தை தேடி தேவனந்தல் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும், மாற்று இடம் தேட விவசாயிகளும், பொதுமக்களும் முன் வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் நில ஆவணங்கள், வரைபடங்கள், போன்ற பதிவேடுகள் பொதுமக்களிடம் இல்லை வருவாய் துறையிடம் தான் உள்ளது. எனவே வருவாய் துறை ஆவணங்கள், வரைபடங்களை வைத்து மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ் பலராமன் தலைமையில் திருவண்ணாமலை வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது.   


-  செய்தியாளர் T.R.கலையரசு

No comments:

Post a Comment

Post Top Ad