திருவண்ணாமலையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சட்டபேரவை துணை தலைவர் கு பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ், சட்ட மன்ற உறுப்பினர்கள் மு பே கிரி மற்றும் பே சு தி சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு அவர்கள் பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, திராவிடத்தையும், பத்திரிகையாளர்களையும், பிரித்து பார்க்க முடியாது .ஜனநாயக நாட்டில் நான்கு தூண்கள் என்று சொன்னால் அதில் ஒரு தூண் பத்திரிகை தான், குறிப்பாக தற்போதைய திமுக ஆட்சி என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடுநிலையாக நடைபெற்று வருகிறது.
ஆகவே இந்த ஆட்சிக்கு பத்திரிகை துறை நண்பர்கள் துணையாக இருக்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment